அரிக்கொம்பன் யானை எங்கே? – வனத்துறை கொடுத்த அப்டேட்!

தமிழகம்

அரிக்கொம்பன் யானை நல்ல உடல்நலத்துடன் சீரான உணவு மற்றும் நீர் ஆகாரம் எடுத்துக்கொள்கிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானையை ஏப்ரல் மாதம் கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தமிழக கேரள எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து அரிக்கொம்பன் யானை தமிழக பகுதிக்குள் நுழைந்தது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானையை ஜூன் 5-ஆம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

forest officials says arikomban elephant

பின்னர் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு வனப்பகுதியில் உள்ள குட்டியார் அணை பகுதியில் அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் விட்டனர்.

இந்தநிலையில் அரிக்கொம்பன் யானையின் தற்போதைய நிலை குறித்து வனத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டத்தில்‌ கடந்த வாரம்‌ பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன்‌ யானை களக்காடு முண்டந்துறை புலிகள்‌ காப்பத்திற்கு உட்பட்ட மேல்‌ கோதையாரில்‌ உள்ள குட்டியார்‌ அணைப்பகுதியில்‌ விடப்பட்டது.

அரிக்கொம்பன்‌ யானையானது தற்பொழுது நல்ல உடல்நலத்துடன்‌ சீரான உணவு மற்றும்‌ நீர்‌ எடுத்துக்‌ கொள்கிறது. யானையின்‌ நடமாட்டத்தினை களக்காடு அம்பாசமுத்திரம்‌ மற்றும்‌ கன்னியாகுமரி வனக்கோட்ட பணியாளர்கள்‌ இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்‌. ஜூன் 6-ஆம் தேதி முதல்‌ வன உயர்‌ அதிகாரிகள்‌, கால்நடை மருத்துவக்குழு, முன்‌ களப்‌ பணியாளர்கள்‌ உள்ளடக்கிய மொத்தம்‌ 6 குழுக்களால் அரிக்கொம்பன்‌ கழுத்தில்‌ பொருத்தப்பட்டுள்ள.

forest officials says arikomban elephant

ரேடியோ காலர்‌ தொழில்நுட்பம்‌ மூலம்‌ யானையின்‌ நடமாட்டம்‌ துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை சார்பாக யானைக்கும்‌ பொது மக்களுக்கும்‌ தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும்‌ திருநெல்வேலி, தென்காசி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துடன்‌ இணைந்து எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

“அனைத்து தரப்பு மக்களுக்குமானது திராவிட மாடல் அரசு” – ஸ்டாலின்

“அமித்ஷா வருகையால் மு.க.ஸ்டாலினுக்கு ஜூரம்” : அண்ணாமலை

+1
0
+1
1
+1
0
+1
2
+1
2
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *