வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைக்க, கோவை வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மண் கிண்ணம் வழங்கினர்.
கோடைக்காலம் தொடங்கிய நிலையில் உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் வனத்துறை சார்பில் வனப்பகுதி ஒட்டி தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பேரூர், வடவள்ளி, செல்வபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், சரவணம்பட்டி கணபதி போன்ற பகுதிகளில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க மண் கிண்ணங்கள் இலவசமாக வழங்கி வரும் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர்.
பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதை வாங்கி வீட்டில் மொட்டை மாடி, மரத்துக்கு அடியில் போன்ற பகுதிகளில் பறவைகளுக்கு சிறுதானிய உணவுகள், தண்ணீர் வைத்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: தினமும் சிறிது ரெட் ஒயின் குடிப்பது ஆரோக்கியமானதா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!