கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை காவல்துறையிடம் மருத்துவ கல்வி இயக்குனரகம் இன்று (நவம்பர் 17) ஒப்படைத்துள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையான பிரியா, தவறான சிகிச்சையால் காலை இழந்ததுடன், சிகிச்சை பலனின்றியும் கடந்த நவம்பர்15ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதே பிரியாவின் மரணத்திற்கு காரணம் என பல்வேறு தரப்புகள் தெரிவித்தன.
அதேநேரத்தில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிகிச்சையின்போது மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததும், மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது துறைரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை காவல்துறையிடம் மருத்துவ கல்வி இயக்குனரகம் இன்று (நவம்பர் 17) ஒப்படைத்துள்ளது.
அந்த அறிக்கையில், பிரியாவுக்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தது உறுதியாகியுள்ளதாகவும், அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தவறு செய்துள்ளார்கள் எனவும் சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விசாரணை அறிக்கையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளுவார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெ.பிரகாஷ்
ரசிகர்களுக்கு நடிகர் அஜித் புது அட்வைஸ்!
பணமோசடி வழக்கு: சுகாதாரத் துறை அமைச்சர் ஜாமீன் மனு தள்ளுபடி!