பிரியா மரணம்: வழக்குப்பதிவு டாக்டர்களுக்கு சம்மன்!

தமிழகம்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்தது தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் இன்று (நவம்பர் 15) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்த நவம்பர் 7-ம் தேதி மூட்டு சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவரது வலது காலில் வீக்கம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக நவம்பர் 8-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதிக்கப்பட்டார். காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருந்ததால் வலது கால் அகற்றப்பட்டது.

இந்தநிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியா, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விளையாட்டு வீராங்கனை பிரியாவுக்கு கவனக்குறைவான சிகிச்சை அளித்த பெரியார் நகர் மருத்துவர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பிரியா உயிரிழந்தது தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டு பெரவள்ளூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மருத்துவ கவுன்சில் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

”கட்டாய மதமாற்றம் நாட்டுக்கு அச்சுறுத்தல்!” – உச்சநீதிமன்றம்

நடிகர் கிருஷ்ணா மறைவு: மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் கூறிய முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0