கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் தொடர்புடைய மருத்துவர்களை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு கவனக்குறைவாகச் சிகிச்சை அளித்த சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவர்கள் பால் ராம், சோம சுந்தரம் ஆகியோர் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிரியா மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்திருந்த காவல்துறையினர், கவனக்குறைவாக மரணம் விளைவித்தல் என வழக்கின் பிரிவை நேற்று மாற்றினர்.
இந்தநிலையில், கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு கவனக்குறைவான சிகிச்சையளித்த மருத்துவர்கள் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்து, காவல் நிலையத்தில் ஆஜராகும் படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மருத்துவர்கள் காவல்நிலையத்தில் சரணடையாமல் தலைமறைவாக இருந்தனர். அவர்களது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மருத்துவர்களை கைது செய்ய கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பிரியா மரணத்தில் கவனக்குறைவான சிகிச்சையளித்த மருத்துவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செல்வம்
பாகிஸ்தானுக்கு உளவு: சிக்கிய வெளியுறவுத் துறை பணியாளர்!
சவுக்கு சங்கருக்கு கிடுக்குப்பிடி போட்ட நீதிமன்றம்!