சென்னையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால் பந்தாட்ட வீராங்கனை உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் படித்து வந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா, கடந்த மாதம் 20-ந்தேதி பயிற்சியில் ஈடுபட்டபோது வலது காலில் வலி ஏற்பட்டுள்ளது.
அவருக்கு வலதுகாலில் சவ்வு கிழிந்திருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 7-ந்தேதி ஆபரேசன் நடந்துள்ளது. அங்கு தவறான சிகிச்சை வழங்கியதால் வலி அதிகமானது.
இதனால் பிரியா ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த வாரம் சனிக்கிழமை அறுவை சிகிச்சையின் மூலம் வலது கால் அகற்றப்பட்டது.
இந்தநிலையில் பிரியாவின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கியது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரியா காலை 4 மணிக்கு உயிரிழந்தார்.
பெரியார் நகர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களை கைது செய்ய வலியுறுத்தி பிரியா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவனையில் உறவினர்களும், நண்பர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரியா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அந்த வாகனத்தை மறித்து ஏராளமானவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தைத் தொடர்ந்து பூக்கடை காவல் நிலைய துணை ஆணையர் பிரதீப் மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவனை டீன் தேரணி ராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை முடித்துக்கொண்டு வீராங்கனை பிரியாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
கலை.ரா
அழைத்தார் எடப்பாடி: சென்றார் கே.என். நேரு
பிரியா குடும்பத்துக்கு 1 கோடி இழப்பீடு கேட்கும் எடப்பாடி பழனிசாமி