சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 12) முதல் ஆகஸ்ட் 14 வரை மூன்று நாட்களுக்கு உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.
உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடத்தப்பட்டும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
உணவு வீணாகுவதைத் தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இங்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 14ஆம் தேதி காலை 7 மணி அளவில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்படுகிறது. இந்த உணவு திருவிழாவில் திரைக்கலைஞர்கள், பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்
விருமன் : கார்த்தியா? அதிதியா?