ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையும் குறைந்தது. இந்த நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ மல்லி 800 ரூபாய்க்கும் முல்லை, ஜாதி மல்லி மற்றும் ஐஸ் மல்லி 500 ரூபாய்க்கும் கனகாம்பரம் 600 ரூபாய்க்கும் சாமந்தி 180 ரூபாய்க்கும் சம்பங்கி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பன்னீர் ரோஸ் 80 ரூபாய்க்கும் சாக்லேட் ரோஸ் 120 ரூபாய்க்கும் அரளிப்பூ 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதுகுறித்து பேசியுள்ள கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாகக் குழு தலைவர் முத்துராஜ், ’’கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அனைத்து பூக்களின் விலையும் குறைந்தது. அதேபோல் வியாபாரம் இல்லாமல் சாமந்தி, பன்னீர் ரோஸ், சாக்லேட் ரோஸ் ஆகிய பூக்கள் தேக்கம் அடைந்ததால் 10,000 டன் பூக்களை குப்பையில் கொட்டினோம்.
வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு அனைத்து பூக்களின் விலையும் மேலும் உயரும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்
ஆசிரியர் முதல் ஆன்மீக அம்மா வரை! யார் இந்த பங்காரு அடிகளார்?
வரிசை கட்டும் பண்டிகைகள்: அதிகரிக்கும் விமானக் கட்டணங்கள்!