தூத்துக்குடி பகுதியில் இடுகாடுகள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டுவதற்காக , நடமாடும் எரிவாயு தகன வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நெல்லை, தூத்துக்குடியில் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின.
மேலும் பல ஏரி, குளங்கள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் முற்றிலுமாக அவை துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இடுகாடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் கடந்த 5 நாட்களாக மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் மற்றும் உடல்நலக்குறைவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு உதவுவதற்காக கோவையில் இருந்து நடமாடும் எரிவாயு தகன வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் சடலங்களை எரியூட்டப்பட்டு ஒரு மணி நேரத்தில் அஸ்தி உறவினர்களிடமே வழங்கப்பட்டு வருகிறது.
பல கிராமப்புறங்களில் சாதி வேறுபாடு காரணமாக இறந்த உடலை தகனம் செய்வதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. அதற்கு தீர்வாக கடந்த ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்நாட்டின் முதல் நடமாடும் எரிவாயு தகன வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.
முழுக்க முழுக்க கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி தகனம் செய்யப்படும் இந்த வாகனம் மூலம் குடியிருப்பு பகுதி இல்லாத பகுதிகளில் இறந்தவர்களின் உடல் எரியூட்டப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“ஸ்டாலினுக்கு மக்களை விட இந்தியா கூட்டணி முக்கியமா?”: நிர்மலா சீதாராமன் பேட்டி!
தனுஷ் பட இயக்குனருடன் இணையும் லெஜண்ட் சரவணன்