Flood warning: release of surplus water in Sembarambakkam today

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு:  தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகம்

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்று உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்டம் மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். நேற்று ஏரியில் நீர்  இருப்பு 21.96 அடியாகவும் கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து விநாடிக்கு 231 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர்வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின்  நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக்டோபர் 8) காலை 10.00 மணி அளவில் விநாடிக்கு வெள்ள நீர் போக்கி வழியாக 100 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

ராஜ்

மீண்டும்… மீண்டுமா?: வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட்!

எடப்பாடி பக்கத்தில் உதயகுமாருக்கு இடமா- பன்னீருக்கு எந்த சீட்?  முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு சென்ற லேட்டஸ்ட் ‘மின்சார’ மெசேஜ்! 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *