நிரம்பும் வைகை அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published On:

| By christopher

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து  அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு  பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால்  கரையோரமுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. ஏற்கனவே முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில்,

தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,310 கன அடியாக உள்ளது. தற்போது மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5,338 கன அடியாக உள்ளது.

இன்று காலை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.

அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும்.

இதனால் கரையோரமுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. அணையின் நீர்மட்டம் 53.53 அடியாக இருந்த நிலையில், தற்போது 53.80 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 20.28 டிஎம்சி ஆக உள்ளது. அத்துடன், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,238 கன அடியில் இருந்து 2,702 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

இஸ்ரேல் – ஹமாஸ் : தாக்குதல் நோக்கமும் அரசியல் வியூகமும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share