வெள்ள பாதிப்பு : சென்னை வரும் மத்திய இணையமைச்சர்!

தமிழகம்

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார்.

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் ஜல்சக்தித்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார் என்று மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டிசம்பர் 7 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முதல்வருடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்.

அப்போது மத்திய குழு தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை  மத்திய இணை அமைச்சர் சென்னை வருகிறார். அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம், சென்னையின் மேற்கு மாம்பலம் மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வெற்றிமாறன் இயக்கம், அட்லி வசனம்: ஜிவி பிரகாஷ் செம அப்டேட்!

IPL2024: தோனியின் இடத்தை நிரப்ப… 3 வீரர்களை டார்கெட் செய்யும் சென்னை அணி?

யாஷ் 19 படத்தின் டைட்டில் இதுதான்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *