ஃபெஞ்சல் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2000 நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழையால் கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 3) விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் உணவு, தண்ணீர் கேட்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.
அப்போது நிவாரண நிதி அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்தசூழலில் அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கும்பமேளா: 5 நட்சத்திர டெண்டில் தங்க ஒரு நாள் ரேட் எவ்வளவு தெரியுமா?
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு… : முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி