மாண்டஸ் புயல் காரணமாக 2வது நாளாக இன்று (டிசம்பர் 10) சென்னையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் நேற்று (டிசம்பர் 9) நள்ளிரவு கரையைக் கடக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது.
புயல் காரணமாக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் 33 விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து சென்னையில் இன்றும் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை, கோழிக்கோடு, கொச்சி, பெங்களூரூ, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்த பிறகும் காற்றின் வேகம் குறையாததால் தற்போது விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றோடு மழை பெய்து வருகிறது.
மோனிஷா
மாண்டஸ் புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?