பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தருவதுடன், பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதன் காரணமாக, கன்னியாகுமரியில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு இன்று (மார்ச் 15) தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை தருவதையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 2,000 போலீசார் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதை தவிரக் கன்னியாகுமரி மாவட்ட போலீசார் 1,200 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாகப் பொருத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரியில் கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குப் படகு போக்குவரத்து மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்கூட்டம் முடியும் வரை கன்னியாகுமரி கடற்கரை, காந்தி மண்டபம், சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகை காரணமாக, கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று மதியம் 2 மணி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், கோவளம், சிலுவைநகர் ஆகிய 7 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து மத்திய கடலோர பாதுகாப்பு குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தொடங்க மனம் இருந்தால் போதும்” : மாணவர்களிடையே வாசிப்பு – புதிய செயல் திட்டம்!
மம்தா பானர்ஜி உடல்நிலை : மருத்துவமனை இயக்குநர் அதிர்ச்சி பேட்டி!
வேலைவாய்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
’வசூல் No 1’ : உலகளவில் புதிய சாதனை படைத்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’