வரத்து குறைவு: எகிறிய மீன் விலை!

தமிழகம்

மான்டஸ் புயலால் நீண்ட நாட்களுக்கு பிறகு  கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவு மீன் கிடைக்காததால் மீன்கள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரங்களில் ஏற்பட்ட வானிலை மாற்றம் மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. புயல் ஓய்ந்து இயல்புநிலை திரும்பியதும் மீன் பிடிக்க கடலுக்கு மீனவர்கள் சென்றனர்.

சென்னை காசி மேட்டில் ஆயிரம் விசை படகுகளில் 300 விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. ஆனால் போதிய அளவிற்கு மீன் கிடைக்காததால் குறைந்த அளவு மீன்களோடு கரை திரும்பினர்.

இந்தநிலையில் விடுமுறை தினமான இன்று(டிசம்பர் 18) காசிமேட்டில் மீன்களை வாங்க மக்கள் படை எடுத்தனர். ஐயப்ப பக்தர்கள் விரதம் மற்றும் மீன் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரங்களில் வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 700 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடல் விரால் கிலோ 400 ரூபாய், சங்கரா 300 ரூபாய், நாக்கு மீன்  550 ரூபாய், சுறா மீன்  500 ரூபாய், இறால் 250 ரூபாய், கடம்பா 250 ரூபாய், நெத்திலி கிலோ 200 ரூபாய் , பாறை மீன் 400 ரூபாய், நண்டு கிலோ 300 ரூபாய், வவ்வால் மீன் 650 ரூபாய், கொடுவா  550 ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.

கலை.ரா

காஜல் அகர்வால் பையன் இவ்வளவு அழகா! ரசிகர்கள் வாழ்த்து!

பெண்ணின் வறுமை: 13 சவரனை திருப்பி கொடுத்த திருடன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.