கிராம சபை போல் இனி நகர சபை கூட்டங்கள்!

Published On:

| By Kalai

கிராமசபை  கூட்டம்  போல் தமிழகத்தில்  முதல்முறையாக  நகர  பகுதிகளில்  நகரசபை, மாநகரசபை  கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் மக்களின் பல்வேறு குறைகளை கேட்டறிந்து, அவை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இந்தநிலையில் கிராமசபையைப் போன்றே நகரங்களிலும் கூட்டங்கள் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

அதன்படி உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆம் தேதி முதல்முறையாக நகரசபை, மாநகர சபை கூட்டங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  பல்லாவரம் அருகே  உ‌ள்ள பம்மல்  6வது  வார்டில் நடைபெற உள்ள மாநகர சபை  கூட்டத்தில் பங்கேற்று  மக்கள்  குறை  கேட்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு  வார்டுக்கு 9 உறுப்பினர்கள்  நியமனம்  செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு  வார்டு கவுன்சிலர்  தலைவராக இருந்து  வருகிறார். 

அதன் அடிப்படையில் ஒவ்வொரு வார்டிலும் குறைகேட்பு கூட்டத்தில்  குறைகள் கேட்கப்பட உள்ளது.

கலை.ரா

பறவை காய்ச்சல்: நாமக்கல் பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு!

டி20: ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து போட்டி ரத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share