ஏடிஎம் கொள்ளையர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தில் 3 ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் லாரியில் கொள்ளை கும்பல் ஒன்று தப்பித்து தமிழ்நாடு நோக்கி வந்தது.
இதுகுறித்து கேரள போலீஸ் தகவல் அளித்ததை தொடர்ந்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக போலீசாரை அலர்ட் செய்தார்.
இன்று (செப்டம்பர் 27) காலை நாமக்கல் அருகே குமாரபாளையம் லட்சுமிநகரை அடுத்த பச்சாப்பாளையம் பகுதியில் வந்த கண்டெய்னர் லாரியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தனர்.
ஓட்டுநரிடம் கண்டெய்னர் கதவை திறந்து காட்ட சொன்னபோது அதில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹூண்டாய் கிரேட்டா கார் ஒன்று இருந்தது.
கண்டெய்னருக்குள் இருந்த கொள்ளை கும்பல், ஆயுதங்களை கொண்டு போலீசாரை தாக்க முயன்றுள்ளது.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஏடிஎம் கொள்ளையர்களை சுட்டு பிடித்த தமிழக போலீஸ்!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் கே.ஆர்.ஸ்ரீராம்