பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published On:

| By christopher

விருதுநகர் பட்டாசு ஆலையில் இன்று (ஜனவரி 4) ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது.

நாக்பூர் உரிமம் பெற்ற பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை எடை பார்க்கும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் தரைமட்டமானது.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.

இதுவரை வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவகுமார், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. 90 சதவீத படுகாயங்களுடன் 2 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அச்சம் எழுந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் சம்பவம் இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பட்டாசு ஆலை நிறைந்த விருதுநகரில் அடிக்கடி வெடி விபத்து சம்பவங்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இன்று 6 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

புத்தாண்டில் முதன்முறையாக குறைந்த தங்கம் விலை!

பொங்கல் விடுமுறை : சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!

கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி : பள்ளித் தாளாளர் உட்பட 3 பேர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share