தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். தங்களுக்கு தேவையான, புத்தாடைகள், பட்டாசுகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. விதிகளை மீறி பட்டாசு கடைகள் செயல்பட்டால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 42 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், கூடுதலாக பிற மாவட்டங்களில் இருந்து 26 தீயணைப்பு வாகனங்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், பட்டாசு பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவு கூடும் இடங்களான தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உட்பட சென்னை பெருநகரின் பல பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
நிரம்பும் வைகை அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஆன்லைனில் அழகு சாதனங்கள்… அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!