நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அலுவலக கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையம் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது.
இதில் தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையத்தில் நேற்று இரவு அங்கு பணியிலிருந்த காவலர்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர். இன்று அதிகாலை மின் கசிவு காரணமாக தீப்பிடித்து அந்த பகுதியானது புகை மண்டலமாக மாறியது. அங்கிருந்த காவலாளி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். அங்கிருந்த லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
தீ விபத்து ஏற்பட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செல்வம்
தங்கம் விலை: ஒரே நாளில் அதிரடி வீழ்ச்சி!
மணிப்பூர்: அதிகாலையில் நிலநடுக்கம்!