சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இன்று (ஏப்ரல் 2 ) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மொத்தம் 14 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பொன்விழா நினைவாக மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.ஐ.சி பெயர்ப்பலகையில் தீப்பிடித்துள்ளது.
இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விடுமுறை தினத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. தற்போது அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஐபிஎல் புதிய விதிகள்: வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை குழப்பம்!