நடிகை கவுதமி புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனது மொத்த சொத்துகளையும் ஏமாற்றி அபகரித்த பாஜக பிரமுகருக்கு, கட்சியின் முக்கிய தலைவர் ஆதரவாக இருப்பதால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி இன்று காலை அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 37 வருடங்களாக திரைத்துறையில் உழைத்து சேர்த்த மொத்த சொத்துகளையும், பாஜக பிரமுகரான அழகப்பன் என்பவர் மோசடி செய்து ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த விஷயத்தில் தற்போது வரை எனக்கு ஆதரவு தராமல், என்னை ஏமாற்றி தலைமறைவாகி உள்ள அழகப்பனுக்கே பாஜகவின் மூத்த உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக உள்ளனர் என்றும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அழகப்பன் தன்னை ஏமாற்றியது தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும், தற்போது தமிழக முதல்வர், காவல் துறை மற்றும் நீதித்துறை மீது மட்டுமே நம்பி இருப்பதாகவும் நடிகை கவுதமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை கவுதமி புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அழகப்பன் உட்பட அனைவரும் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜகவில் இருந்து திடீர் விலகல்… நடிகை கவுதமி குமுறல்!
அடுத்தடுத்து பாஜகவினர் கைது…. தமிழகத்திற்கு 4 பேர் குழுவை அனுப்பிய தலைமை!
மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
டிஜிட்டல் திண்ணை: அதிமுக பற்றி அண்ணாமலை சைலன்ட்- அடித்து ஆடும் ஸ்டாலின்! தடுத்து ஆடும் எடப்பாடி