சாலைகளில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 83,010 கடைகளின் உரிமையாளர்களுக்கு மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சி பகுதிகளில் 33,069 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
மீதமுள்ள கடைகளில் இரண்டு குப்பைத் தொட்டிகளை விரைந்து வைக்க கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும்.
நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.
-ராஜ்
விநியோக உரிமை: பிறமொழி படங்களையும் கைப்பற்றும் ரெட் ஜெயண்ட்!
கிச்சன் கீர்த்தனா : கோதுமை ஓமப்பொடி!