மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜனவரி 22) வெளியிடுகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நிகழாண்டிற்கான வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலை மக்கள் பார்வையிடவும், அதில் திருத்தங்கள் செய்யவும், புதிதாக பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 9ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் மழை, வெள்ளம் புயல் உட்பட பல்வேறு காரணங்களால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி ஜனவரி 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை – ஜனவரி 22) வெளியிடப்படுகிறது.
தமிழகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, சென்னையில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலை ஆட்சியர்கள் வெளியிட உள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சேமியா வெஜ் பிரியாணி
மாநாடு முடிஞ்சி அயோத்திக்கு போறேன் : அப்டேட் குமாரு
ஒன்றிய அரசு மாநில நிதி சுயாட்சியைப் பறித்துவிட்டது : தங்கம் தென்னரசு