1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டால் பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளும் தொடங்கிவிடும். அந்த வகையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கக்கூடிய 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்விற்கான நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்வைத் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் தேர்வை நடத்திட வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 28 ஆம் தேதி என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவில் தேர்வு அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
ராகுல் விவகாரம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி!
பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்: பதிவாகாத எப்.ஐ.ஆர்… ஏன்?