வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (நவம்பர் 29) ஃபெஞ்சல் புயலாக வலுவடைந்ததது. ஃபெஞ்சல் புயலானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் மேற்கு – வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை 8.30 மணியளவில், புதுச்சேரிக்கு கிழக்கு – வடகிழக்கே 120 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ, நாகப்பட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கி.மீ, திருகோணமலைக்கு வடக்கே 420 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இந்த புயலானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து, இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 – 90 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளைஉடனுக்குடன்பெறமின்னம்பலம்வாட்ஸப்சேனலில்இணையுங்கள்….
“ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்” – ஸ்டாலின் பேட்டி!
ஃபெஞ்சல் புயல்… வானில் வட்டமடித்த விமானங்கள்!