தமிழ்நாட்டில் சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. Female police officers in camp offices
அண்ணா பல்கலைக்குள் மாணவி பாலியல் வன்கொடுமை, அரசு பள்ளி மாணவி 3 ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை, ரயில் பயணத்தின் போது பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு என பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த கொடுமைகள் காவல்துறைக்கும், அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு முக்கியம்! Female police officers in camp offices
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியிட்ட அந்த சுற்றறிக்கையில்,
“காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் கணினி தொடர்பான வேலைகள், கைபேசிகளை கையாள்வது (காத்திருப்பு பணிகள்) போன்ற பணிகளுக்காக ஏராளமான பெண் காவலர்களை பணியமர்த்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ வழக்குகள் பதிவாவது அதிகரித்து வருவதால், பெண் காவலர்களைப் காவல் நிலையப் பணிகளில் சிறந்த முறையில் பயன்படுத்துவது அவசியம்.
பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை மற்றும் பிற பாலின அடிப்படையிலான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை கையாள்வதில் பெண் காவலர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் புகாரளிக்கும் போது அவர்கள் பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள் என்பதை உணரச் செய்வதற்கும், ஆதரிப்பதற்கும், புகார்கள் குறித்து கேட்பதற்கும் காவல் நிலையங்களில் பெண் காவலர்கள் இருப்பது அவசியமாகும்.
பெண் போலீசார் காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியமர்த்த வேண்டும்.

எனவே, நிர்வாகப் பணிகளுக்காக முகாம் அலுவலகங்களில் பெண் காவலர்களை தேவையில்லாமல் பணியமர்த்தாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
காவல்துறையில் அனைத்து பிரிவுத் தலைவர்களும் ஏற்கனவே உள்ள பணியமர்த்தல்களை மதிப்பாய்வு செய்து தேவையான மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். Female police officers in camp offices