வங்கிக் கொள்ளை: 3 பேர் கைது, 18 கிலோ தங்கம் மீட்பு!

தமிழகம்

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் ஃபெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு செயல்பட்டு வருகிறது.

நேற்று (ஆகஸ்ட் 13 ) பகல் நேரத்தில் இந்த வங்கியில் 16 கோடி மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்ற நபரே இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது.

இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், பாலாஜி என்ற நபரை போலீசார் இன்று(ஆகஸ்ட் 14) காலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில், இந்த கொள்ளை சம்பவத்திற்கு கூட்டாளியாக இருந்த சக்திவேல் ,சந்தோஷ் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில், 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் கூட்டாளிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் மீதமுள்ள 14 கிலோ தங்கத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அற்பத்தனத்தால் நேருவை மறைக்க முடியாது: காங்கிரஸ் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.