காதலர் தின கொண்டாட்டத்திற்காக, தமிழ்நாட்டின் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா பூக்கள் விமானத்தில் பறக்கவிருக்கின்றன.
ஓசூர் பகுதியில் தாஜ்மகால், ரெட் ரோஸ், நொய்ளாஸ், பாஸ்ட் ரோஸ், ஒயிட் ரோஸ் உள்பட 40-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் பயிரிடப்படுகின்றன. Hosur rose export
இங்கு சாகுபடி செய்யப்படும் ரோஜா பூக்கள் சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன
இந்த மலர்கள் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் சீனா, ஆப்பிரிக்கா நாடுகள் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஓசூர் பகுதி மலர்களுக்கு வரவேற்பும், வெளிநாட்டு ஆர்டர்களும் குறைந்து விட்டது.
இதனால் ரோஜா மலர் சாகுபடியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தவிர, விமான கட்டணம் அதிகம், ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட காரணங்களாலும் விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய அதிக ஆர்வம் செலுத்தவில்லை.
விவசாயிகள் மகிழ்ச்சி
அதே சமயம் உள்ளுர் மார்க்கெட்டுகளில் ரோஜா மலர்களின் வரவேற்பு அதிகமடைந்துள்ளதையும், வெளிநாட்டு ஆர்டர்களை விட அதிகமான ஆர்டர்கள் கிடைப்பதாகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் தாஜ்மகால் வகை ரோஜா பூக்களுக்கு காதலர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது
20 பூக்கள் கொண்ட பன்ச் ஏற்றுமதியில் ரூ.400 வரையிலும் உள்ளூரில் ரூ.250 முதல் 300 எனவும் விற்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கடந்த 10 நாட்களாக, ரோஜாக்களை செடிகளில் இருந்து பறித்து அதன் மொட்டு விரியாத வகையில் உறைகளை போட்டு குளிர்சாதன அறைகளில் பராமரித்து வருகின்றனர்.
தற்போது தினமும் பூக்களை தரம் வாரியாக பிரித்து வெட்டப்பட்டு பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ரோஜா மலர்கள் 12-ம் தேதி வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
அதிகரிக்கும் செலவுகள்
கடந்த காலங்களில் 1 கோடியில் இருந்து 3 கோடி வரை ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சீனா ஆப்பிரிக்கா நாடுகளின் போட்டி அதிகரித்து விட்டதாலும் ஏற்றுமதி செலவு அதிகரித்து விட்டதாலும், இந்த ஆண்டு 50 லட்சம் முதல் சுமார் 75 லட்சம் வரை தான் ரோஜா மலர்கள் ஏற்றுமதி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரோஜா சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.
-ரசிக பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புது கொடியுடன் ரசிகர் படை : அரசியலுக்கு வருகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?
IND vs ENG Test: கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி இல்லை… பிசிசிஐ அறிவிப்பு!
Hosur rose export