நரபலி அச்சம் : ம.பி.பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க உறுதி!

தமிழகம்

நரபலிக்குப் பயந்து மத்தியப் பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த பெண்ணிற்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி ஷர்மா, தன்னுடைய வளர்ப்புத் தாயால் தான் நரபலி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தால் தமிழகத்திற்குத் தப்பி வந்தார். தமிழகத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், “எனது தாய் சுதா ஷர்மா மூட நம்பிக்கைகளிலும், மாந்திரீகங்களிலும் அதிக அளவில் நம்பிக்கை கொண்டவர். தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே 10 வயது சகோதரர் உட்பட 2 பேரை அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராகப் போலீசில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை.

நரபலியில் இருந்து தப்பிப்பதற்காகத் தக்ஷிணா மூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், தனது தாய் சார்ந்துள்ள அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவர்.

வலுக்கட்டாயமாகத் தன்னை போபாலுக்கு கொண்டு சென்று விட்டால் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 23) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன் முன்பு விராசணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்து நீதிபதி, 21ஆம் நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகங்களை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது

போலீஸ் தரப்பில், நரபலி அச்சத்தால் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்த பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டது. மேலும், ஷாலினி ஷர்மாவின் பெற்றோர் இது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்யவும் அதேபோல வளர்ப்புத் தாய் மீது பெண் அளித்த புகார் பற்றி போபால் காவல் ஆணையர் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோனிஷா

விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்: கே.பி.முனுசாமி

எடப்பாடிக்கு வாழ்த்துகள்…. ஆனால்: திருமாவளவன் திடீர் மெசேஜ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *