உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் இந்தியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. கேரளாவில் எதிர்பாராதவிதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஒரே மாதத்தில் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33-ல் இருந்து ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் பதிவாகும் மொத்த கொரோனா பாதிப்புகளில் 90 சதவிகிதம் கேரளாவில் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தொடர்ந்து பலமுறை தனது உருவத்தை மாற்றி இருக்கிறது. அந்த வகையில், உருமாறி ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாறியதுதான் இந்த ஜே.என். வகை வைரஸ்.
இந்த வகை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, மூக்கடைப்பு, தலைவலி, மூச்சுவிட சிரமம் ஆகிய வழக்கமான அறிகுறிகளுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் இந்தியாவுக்குத்தான் புதியது என்று கூறும் தொற்று நோய் வல்லுநர்கள், விழிப்போடு இருப்பதோடு முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, தேவையெனில் சிகிச்சையை பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
வைரஸ் பரவலுக்கு மத்தியில் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் அவசியம் என்றால் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையும் செய்து கொள்வது நல்லது என்றும் கூறுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
சண்டே ஸ்பெஷல்: வீக் எண்டில் விருந்து… அடுத்த நாள் பட்டினி… இந்தப் பழக்கம் சரியா?
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வராதீங்க: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!