சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்ட் 15) விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தியது தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் அருகில் இருந்து நேற்று விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணி தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள சோழன் சிலையில் நிறைவடைந்தது.
பேரணிக்கு சங்கத்தின் மாநில தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். பேரணியின்போது, மத்திய அரசு உடனடியாக எம்எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு விளைபொருளுக்கான உரிய விலையை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றி உள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று இந்தப் பேரணியில் விவசாயிகள் டிராக்டருடன் பங்கேற்றதால் தஞ்சை நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: முழங்கை வலி… விடுபடுவது எப்படி?
டாப் 10 நியூஸ்: திமுக மா.செ.கூட்டம் முதல் கனமழை வரை!
அமெரிக்க – உலக முரணில் ஒன்றியத்தின் நகர்வு என்ன? பகுதி 4
பியூட்டி டிப்ஸ்: நீண்ட தலைமுடி பெற… இதைப் பின்பற்றுங்கள்!