கத்திரிக்காய் அமோக விளைச்சல்: விவசாயிகள் கவலை!

Published On:

| By Monisha

Farmers are worried about fall in price of brinjal

தருமபுரி மாவட்டத்தில் விளையும் ஒயிட் லாங் கத்திரிக்காய்கள் அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையில் தற்போது விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மொரப்பூர், அரூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பாலக்கோடு பகுதியைச் சுற்றியுள்ள புளிக்கரை, மல்லாபுரம், திருமல்வாடி, கரகூர், பெல்ரம்பட்டி, ஐந்து மைல்கள், அதக்கப்பாடி, பாப்பாரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று நீர் பாசனம் மற்றும் சொட்டுநீர் பாசனம் மூலம் தக்காளி, கத்திரி, வெண்டை, குடமிளகாய், முள்ளங்கி உள்ளிட்டவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

தற்போது இந்தப் பகுதியில் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒயிட் லாங் கத்திரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு விளைவிக்கப்படும் கத்திரிக்காய்க்கு கேரள மாநிலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இங்கு அறுவடை செய்யப்படும் கத்தரிக்காய் அனைத்தும் தினமும் 10 டன்னுக்கு மேல் கேரள மாநிலத்துக்கும், வெளிநாட்டுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் விழா காலங்கள் எதுவும் இல்லாததால் விலை குறைந்து உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள கத்திரிக்காய் விவசாயி ஒருவர், “ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து மூன்று ஏக்கர் ஒயிட் லாங் கத்திரிக்காய் பயிரிட்டுள்ளோம். 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் சுமார் 6 மாதம் முதல் 7 மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும்.

ஏக்கருக்கு ஒரு வாரத்துக்கு 4 டன் கத்திரிக்காய் அறுவடை செய்யப்படுகிறது. இந்த ஒயிட் லாங் கத்திரிக்காயை தொடர்ந்து பயிரிட்டு வருகிறேன்.

கடந்த மாதம் வரை கத்திரிக்காய் ஒரு டன் ரூ.30,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு டன் ரூ.6,000 முதல் 7,000 வரை விற்பனையாகிறது. காய் அறுவடை கூலி, மார்கெட்டுக்கு கொண்டு செல்ல வாகன வாடகை உள்ளிட்டவற்றை ஒப்பந்ததாரர்கள் ஏற்றுக் கொள்வதால் சற்று ஆறுதலாக உள்ளது. ஆனாலும் விலை கட்டுபடியாகவில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

“நம்ம சாலை” செயலி துவக்கம்: சிறப்பம்சங்கள் என்ன?

டிஜிட்டல் திண்ணை: நம்மிடையே கறுப்பாடுகள்… அமைச்சரவைக் கூட்டத்தில் சீறிய ஸ்டாலின்

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் வடை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share