’மறக்கவே முடியாது ரஹ்மான்’: இசை நிகழ்ச்சியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி!

தமிழகம்

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் சென்னையை அடுத்த பனையூரில் ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்தது. இதற்கான டிக்கெட்டுகள் மளமளவென விற்று தீர்ந்த நிலையில், மழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மாற்று ஏற்படாக இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததால் ஆர்வத்துடன் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட காலதாமதம், வாகனத்தை பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட்டது, ரூ.1,000-க்கு டிக்கெட் வாங்கியவர்கள் வேறொரு பிரிவுக்கான இருக்கையில் சென்றது மற்றும் போதுமான இருக்கை இல்லாததால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை அனைத்தையும் சகித்து கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு மோசமான ஆடியோ சிஸ்டம் காரணமாக பாடலை கேட்க முடியவில்லை என்றும், உணவு ஏற்பாடும் மோசமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் ஏ.ஆர்.ரகுமானின் இந்த ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி, தங்கள் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது என்றும் ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

மேலும் ஆசையுடன் நிகழ்ச்சியை காண வந்த தங்களுக்கு அதிருப்தி மட்டுமே மிஞ்சியதாகவும், இதனால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும், எனவே இந்த நிகழ்ச்சிக்காக தாங்கள் செலுத்திய கட்டணம் திரும்ப தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு!

அப்பாவான பும்ரா: கிஃப்ட் கொடுத்த பாகிஸ்தான் வீரர்

+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *