Famous rowdy Kaka Thoppu Balaji shot dead in encounter!

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

தமிழகம்

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று (செப்டம்பர் 18) அதிகாலையில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (46). பிரபல ரவுடியான இவர் மீது 5 கொலை வழக்கு, 19 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசிய வழக்கில் தேனாம்பேட்டை போலீசார் காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார்.

அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே பி.டி குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருப்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை 4.50 மணியளவில் ரவுடி பதுங்கி இருந்த பி.டி குடியிருப்பைச் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.

அப்போது, போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை, காவல் ஆய்வாளர் சரவணன் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், இடது மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, பாலாஜியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ரவுடி தாக்கியதில் காயமடைந்த காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த என்கவுண்டர் தொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் புளியந்தோப்பு  காவல் துணை ஆணையர் முத்துகுமார் ஆய்வு செய்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பயில்வான் ரங்கநாதன், காந்தராஜ் மீது நடவடிக்கை கோரும் மாதர் சங்கம்!

மகனின் பிறந்தநாள் விழாவில் மரணமடைந்த இளம் தாய்: அதிரவைக்கும் சோகம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *