அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 17) காலை தொடங்கி வைத்துள்ளார்.
தைத்திருநாள் பொங்கலையொட்டி கடந்த 15 ஆம் தேதி மதுரை அவனியாபுரத்திலும், நேற்று 16ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்று முடிந்தது.
அதன் தொடர்ச்சியாக உலகப் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
முதலில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் போட்டியை முறைப்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இந்த போட்டியில் மொத்தம் 1,000 காளைகளும் 600 வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒவ்வொரு சுற்றிலும் ஐம்பது மாடுபிடு வீரர்கள் என சுமார் 10 சுற்றுகள் நடைபெற உள்ளது.
போட்டியில் சிறப்பாக விளையாடும் சிறந்த காளைக்கும், அதிக மாடுகளை அடக்கும் வீரருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார்களை பரிசாக வழங்க உள்ளார்.
மேலும் காளைகளை அடக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பைக், தங்க நாணயம், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த போட்டியைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ள நிலையில் சுற்றுலா துறை சார்பில் அவர்கள் சிறப்பு பேருந்துகளில் அவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
இப்போட்டியை காண 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சுற்றுலா துறையில் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு நடவடிக்கையாக தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி மற்றும் 2 எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ் : வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம் கண் மை!