சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள்… எதற்காக?

Published On:

| By Selvam

தமிழ்நாடு முழுக்க உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று (ஜூலை 12) கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான ஜூலை 12 அன்று அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது”  என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: செந்தில் பாலாஜி வழக்கு முதல் இந்தியன் 2 ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா: பாலக் தாலி பித்

டிஜிட்டல் திண்ணை:  அண்ணாமலை கைது?  களத்தில் குதிக்கும் அமித் ஷா…  பரபரப்புத் திருப்பங்கள்!

புத்தரை வழங்கிய இந்தியா, யுத்தத்தை ஏற்காது…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment