தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 1ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு கல்வி நிர்வாகங்களும் இணைந்து நடப்பு கல்வியாண்டுக்கான பொது மாணவர் சேர்க்கையை தொடங்கி நடத்தி வருகிறது.
நடப்புக் கல்வியாண்டில் வேளாண் பல்கலையின் 14 பட்டப் படிப்புகளுக்கும் (UG), 3 பட்டயப் படிப்புகளும் (DIPLOMA), மீன்வளப் பல்கலையின் 6 பட்டப் படிப்புகளுக்கும்( UG), 3 தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் (B.Voc.programme) ஒருமித்தவாறு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இந்த கல்வியாண்டில் வேளாண்மை (ஆங்கில வழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பெற்றோர் கோரிக்கையை ஏற்று, வேளாண்மை (ஆங்கிலவழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி வரை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதார்கள் www.tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 0422-6611346, 0422-6611345, 94886-35077, 94864-25076 என்ற எண்களிலும் ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் (email) மூலமாகவும் வார நாட்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அறிந்து கொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
அமித்ஷாவை சந்தித்த முக்கிய பிரமுகர்கள்!