ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி நீட்டிப்பு தொடர்பான கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் “நான் ஜனாதிபதியோ, பிரதமரோ கிடையாது” என்று பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவியின் பதவிகாலம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைகிறது. எனவே ஆர்.என்.ரவிக்கே பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு புதிய ஆளுநர் தொடர்பான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் அவரே ஆளுநராக தொடர்வார் எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “நான் ஜனாதிபதியும் இல்லை, பிரதமரும் இல்லை” என்று பதிலளித்தார். ’
தொடர்ந்ந்து வயநாடு நிலச்சரிவு குறித்து பேசிய அவர், “நான் கேரளா முதலமைச்சரிடம் பேசினேன். சேதாரத்தை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை என்றும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.
தமிழ்நாடு அரசின் சார்பாக எந்த உதவிகளும் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். அதற்காக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழு அனுப்பியிருக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல், தமிழக அரசின் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் பணமும் அனுப்பியிருக்கிறோம். தேவைப்பட்டால் இன்னும் உதவிகள் செய்கிறோம் சொல்லியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Paris Olympics 2024: மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு… அடித்து ஆடிய பி.வி.சிந்து, லவ்லினா
வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டின் 5 கோடி… நேரில் வழங்கிய அமைச்சர் வேலு