பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பனையூர் அருகே உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு பாஜக கொடி கம்பம் வைக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி சந்திரபிரபா நேற்று (அக்டோபர் 30) உத்தரவிட்டார்,
இந்த காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரபிரபா முன்பு அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அப்போது, மாற்று உடை மற்றும் மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வது குறித்து நீதிபதியிடம் அமர் பிரசாத் ரெட்டி கோரிக்கை வைத்தார்.
இதை கேட்ட நீதிபதி, உங்கள் கோரிக்கை தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்ததுடன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் மீதான நீதிமன்ற காவலை நவம்பர் 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சனாதனம் விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்குகிறார்: உதயநிதி வாதம்!