தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் இன்று (நவம்பர் 23) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொது விநியோகத் திட்டத்திற்கு உணவுப் பொருட்களை அதிக அளவு உணவுப் பொருட்கள் சப்ளை செய்து வரும் அருணாச்சலம் இம்பேக்ஸ் என்கிற நிறுவனத்தின் சென்னை மண்ணடி அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ், இன்டெகிரேடட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களிலும் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ் உள்ளிட்ட பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
ஜெ.பிரகாஷ்
ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
பி.எல்.சந்தோஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: செக் வைத்த கேசிஆர்