தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் முதல்முறையாக தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் கடந்த 2 ஆண்டுகளாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீ மூலக்கரை புதையிடப்பகுதியாகவும், பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் கோட்டை திரடு வாழ்விடப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு ஆய்வுகள் நடக்கின்றன.
இதில் சிவகளை பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த அகழாய்வின்போது தங்கத்தால் செய்யப்பட்ட பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் முன்னோர்களை புதைத்த இடத்தில் தங்கம் கிடைத்தது. தற்போது சிவகளையில் முன்னோர்களின் வாழ்விடப் பகுதியில் தங்கம் கிடைத்து இருக்கிறது.
வாழ்விடப்பகுதியில் தங்கம் கிடைப்பது இதுவே முதல்முறையாகும். சிவகளையில் 2020-ம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வும், 2021ஆம் ஆண்டு 2ஆம் கட்ட அகழாய்வும் நடைபெற்றது. முதற்கட்ட ஆராய்ச்சியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், சங்குப் பொருட்கள், மண்பானைகள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்தன. 2ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு ஆயுதங்கள், வாள், கத்தி, நெல்மணிகள் போன்றவை கிடைத்தன. தற்போது 3ஆம் கட்ட அகழாய்வில் தங்கம் கிடைத்திருக்கிறது.
கலை.ரா
4 வயது சிறுமியின் உயிரைப் பறித்த சிறுத்தை!