ஈவிஎம் பழுது சரிசெய்யப்பட்டது : சத்ய பிரதா சாகு

Published On:

| By Kavi

சென்னை நெற்குன்றத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு  இன்று (ஏப்ரல் 19)  வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே அவை சரி செய்யப்பட்டன.

மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மதுரை உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

நெல்லை தச்சநல்லூர், புதுக்கோட்டை, திருச்சி மேற்கிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

இதுதவிர தஞ்சை,பெரம்பலூர் உள்ளிட்ட தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சில வாக்குச்சாவடிகளிலும் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது.

இந்நிலையில் அவை சரி செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஹெல்த் டிப்ஸ்: கோடையைக் குளிர்ச்சியாக்கும் கற்றாழை

பியூட்டி டிப்ஸ்: வியர்வையை விரட்டும் நறுமணக் குளியல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel