erode hottest district tamil nadu

Heatwave: சூரியனின் கரிசனம் ‘இந்த’ மாவட்டங்கள்ல ரொம்பவே அதிகம்!

தமிழகம்

தமிழ்நாட்டின் அதிக வெப்பம் பதிவான முதல் ஐந்து மாவட்டங்கள் குறித்து, வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று (மார்ச் 13) தொடங்கி மார்ச் 17 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

இன்றும், நாளையும் (மார்ச் 14) தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

erode hottest district tamil nadu

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை”, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடங்கள் குறித்தும், வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டம் 38.6 டிகிரி செல்சியஸ் உடன் முதல் இடத்தையும், சேலம் 38.5 டிகிரி செல்சியஸ் உடன் இரண்டாமிடத்தையும், நாமக்கல் மாவட்டத்தின் கரூர் பரமத்தி 38 டிகிரி செல்சியஸ் உடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே 37.7 மற்றும் 37.6 டிகிரி செல்சியஸ் உடன் தர்மபுரி, வேலூர் மாவட்டங்கள் பிடித்திருக்கின்றன.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜி மீதான ED விசாரணைக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

Samsung: சாம்சங்கின் டபுள் தமாக்கா… சர்ப்ரைஸ் காத்திருக்கிறது மக்களே!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *