erode district recorded highest temperature

தமிழ்நாட்டின் ‘ஹாட்’ மாவட்டம் இதுதான்

தமிழகம்

erode district recorded highest temperature

தமிழ்நாட்டின் மிக வெப்பமான மாவட்டம் எதுவென, வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் முடியப்போகும் தருவாயில் நாளுக்குநாள் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழ்நாட்டில் பதிவாகலாம் என, மக்கள் அச்சம் கொள்ளும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் வானிலை மையம் தமிழ்நாட்டின் வெப்ப மாவட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ” இன்றும் (பிப்ரவரி 29), நாளையும் (மார்ச் 1) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 – 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

erode district recorded highest temperature

அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகபட்சமாக 38.4 செல்சியஸ் வெப்பநிலை ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது”, என தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.

டெல்டா மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை.

தென் தமிழக உள் மாவட்டங்கள்: சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி.

தென் தமிழக மாவட்டங்கள் : ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.

வட தமிழக மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸில் இணைந்தார் தமாகா அசோகன்

திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 2 இடங்கள்: கையெழுத்தானது உடன்பாடு!

erode district recorded highest temperature

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *