தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (பிப்ரவரி6) வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் வெப்பம், மழை மற்றும் பனிமூட்டம் குறித்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
06.02.2024 மற்றும் 07.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
08.02.2024 மற்றும் 09.02.2024; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
10.02.2024 மற்றும் 11.02.2024: தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
12.02.2024: தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
அதிகபட்சமாக தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் 36.4° C வெப்பமும், குறைந்தபட்சமாக ஊட்டியில் 1௦° C வெப்பமும் பதிவாகி இருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 31.5°C வெப்பமும், நுங்கம்பாக்கத்தில் 31.1°C வெப்பமும் பதிவாகி இருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெருக்கும் ED : கெஜ்ரிவாலின் தனி செயலாளர் வீட்டில் ரெய்டு!
இஸ்லாமிய கைதிகளோடு ஆர்.எஸ்.எஸ்.கைதிகளும் விடுதலை: ஆளுநரின் பக்கா பிளான்!