ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (மார்ச் 21) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணியாற்றினார். அப்போது அவர் சில முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நிலையில் இன்று அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது சிவக்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் சோதனை செய்ய முடியவில்லை.
இதையடுத்து 2 காவலர்களை வீட்டில் காவலுக்காக நிறுத்திவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்பி சென்றிருந்தனர்.
பின்னர் சில மணிநேரம் கழித்து சிவக்குமார் குடும்பத்தினர் வீடு திரும்பிய நிலையில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் அவருடைய வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையின் முடிவில் தான் அங்கு என்ன வகையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் தெரிய வரும்.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை மெட்ரோ கொடுத்த ஒருநாள் ஆஃபர்!
பட்டப்பகலில், நடுரோட்டில் படுகொலை: தமிழக பயங்கரம்!