வெள்ள நிவாரணப் பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஏரல் வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருக்கக்கூடிய ஏரிகள், குளங்கள் உடைந்ததால் சாலைகள் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகள் அதிகனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரண முகாம்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி ஏரல் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவருக்கு பதிலாக ஏரல் புதிய வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தோனியை இடித்துத்தள்ளிய வீரரை… அடம்பிடித்து வாங்கிய சென்னை… யாரு காரணம்?
எண்ணூர் எண்ணெய் கசிவு: நிவாரணம் எவ்வளவு?