நாடு முழுவதும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் போலி அழைப்புகள், குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் மோசடி மற்றும் ஊழல்களில் சிக்காமல் இருக்க வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்ந்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, “போலி அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு போதும் உறுப்பினர்களிடம் தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட விவரங்களைப் பகிரும்படி கேட்காது.
பிஎஃப் கணக்கின் பார்வேர்டு, பான் நம்பர், ஆதார் நம்பர், வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி, மற்றும் தனிப்பட்ட பொருளாதார விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்” என்று எச்சரித்துள்ளது.
#Beware of fake calls/messages. #EPFO never asks its members to share their personal details over phone, e-mail or on social media.
#epfowithyou #epf #EPFO #passbook #HumHaiNa #Alert #staysafe #पीएफ #AmritMahotsav pic.twitter.com/tpyewvvVXb— EPFO (@socialepfo) October 1, 2023
சேவைகளில் குறைபாடு மற்றும் ஊழல் குறித்து பிஎஃப் பயனர்கள் 14470 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகளவு பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களை கொண்ட 2வது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் இல்லை… அவரது தம்பியையும் கைது செய்யுங்கள்: நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு!
மீண்டும் 45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!